![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/01/3.jpg)
அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகிய முக்கிய பிரபலங்கள் நடிக்கும் “நிறங்கள் மூன்று” திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஹைப்பர் லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்டதாக உருவாகியுள்ளது. இதற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்த நிலையில் திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.