விசுவாசம், சிறுத்தை, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இவர் இயக்கும் படத்தில் தற்போது நடிகர் சூர்யா நடித்து வருகிறார். தற்காலிகமாக “சூர்யா 42” என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகை திஷா பத்தாணி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.
சரித்திர படமாக சுமார் 10 மொழிகளில் 3 டி முறையில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் படத்திற்கு “வீர்” என தலைப்பு வைக்க பட குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.