தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். இவர் அஜித், சூர்யா, விஜய் என அனைத்து முன்னணி கதா நாயகர்களுடனும் நடித்து விட்டார். இவர் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சிம்ரன் நடிப்பில் கடந்த வருடம் மகான், கேப்டன், ராக்கெட்ரி போன்ற திரைப்படங்கள் வெளியானது.

இவர் தற்போது வணங்காமுடி, துருவ நட்சத்திரம் மற்றும் அந்தகன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2003-ம் ஆண்டு நடிகை சிம்ரன் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சிம்ரன் தன்னுடைய கணவர் தீபக்குடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.