தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலுக்கும் வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாக நடிகர் விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒவ்வொரு முறையும் வருங்கால முதல்வரே என்று விஜயை பலவிதமாக புகழ்ந்து ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். அந்த வகையில் தற்போதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது கவனம் ஈர்த்துள்ளது.

அதாவது நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போன்று சித்தரித்து முதலமைச்சர் நாற்காலியில் உட்காரும் வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டுள்ளனர். அதோடு 2026-ல் ஜார்ஜ் கோட்டையில் அமரப்போகும் நற்பணி நாயகரே எஸ்ஏசியின் வாரிசே என்றும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் கலைஞர் கருணாநிதி, அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக நடிகர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலினின் படமும் போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளதால் திமுக கட்சியுடன் நடிகர் விஜய் கூட்டணி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.