அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் தங்களுக்குள் மழலை மொழியில் சண்டையிட்டுக் கொள்ளும் கலகலப்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கானோரைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் கோபமாகப் பேச, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு சிறுவன் “என்னுடைய அப்பா இந்தியா” என்று மழலை மாறாமல் கூறுகிறார்.

https://www.instagram.com/reel/DSUwyomjFUw/?igsh=bDF1azRmeHh4bWNz

“என் அப்பா போலீஸ் அதிகாரி” என்று ஒரு சிறுமி சொல்ல, அதற்குப் போட்டியாக அந்தச் சிறுவன் “என் அப்பா இந்தியா” என்று கூறியதும், அங்கிருந்த சிறுமிகள் அனைவரும் ஒருசேர “நாங்களும் இந்தியாதான்” என்று உரிமை கொண்டாடுகின்றனர்.

தேசப்பற்றையும் மழலைகளின் வெள்ளந்தியான குணத்தையும் ஒருசேரப் பிரதிபலிக்கும் இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தச் சிறுவன் தனது தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிவதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளான் என்று இணையதளவாசிகள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.