சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் அதிகளவு முதலைகள் வசிக்கிறது. அங்கிருக்கும் நீர்நிலை ஒன்றில் தம்பதியினர் நீராட செல்கின்றனர். இந்நிலையில் அந்த நீர் ஓடையில் முதலை உள்ளதை பார்த்த இருவரும் துளியும் பயப்படவில்லை. மேலும் அந்த முதலையை அழைத்து அதற்கு உணவு கொடுக்க முற்படுகின்றனர். அவர்களின் அழைப்பை ஏற்று அருகே வரும் முதலை, வெறும் கையில் அவர்கள் கொடுத்த உணவையும் வாங்கி சாப்பிட்டு செல்கிறது. இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Only In Florida (@onlyinfloridaa)