மார்ச்சு 28  கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர்.[1]

364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார்.

1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.

1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது.

1801 – புளோரன்சு உடன்பாடு: முதல் பிரெஞ்சுக் குடியரசுக்கும் நேப்பிள்சு இராச்சியத்துக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.[2]

1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.

1809 – மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்சு எசுப்பானியாவை வென்றது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வால்பரைசோ சமரில் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

1854 – கிரிமியப் போர்: பிரான்சும் பிரித்தானியாவும் உருசியா மீது போரை அறிவித்தன.

1879 – ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஊலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.

1910 – கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.

1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.

1933 – இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.

1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: மூன்று-நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் நடுநிலக்கடற்படை இத்தாலியின் ஐந்து போர்க்கப்பல்களைத் தாக்கி அழித்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் கூட்டுப் படை சென் நசேரில் செருமானியப் போர்க்கப்பல் டிர்பிட்சை விரட்டுவதற்கு திடீர்த் தாக்குதலை நடத்தியது.

1946 – பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது.

1951 – முதலாம் இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியப் படைகள் வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகளை மாவோ கே சமரில் தோற்கடித்தது.

1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.

1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.

1979 – பிரித்தானிய மக்களவையில் யேம்சு கலகனின் அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் வெற்றியடைந்தது.

1979 – ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுக்கரு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது.

1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

1994 – தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர்.

2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

623 – முதலாம் மர்வான், உமையா காலிபா (இ. 685)

661 – இரண்டாம் முஆவியா, உமையா காலிபா (இ. 684)

1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520)

1515 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (இ. 1582)

1801 – கார்ல் பிரீட்ரிக் நோர், உருசிய வானியலாளர் (இ. 1883]])

1863 – சில்வா லெவி, பிரான்சிய கீழைத்தேசவியலாளர், இந்தியவியலாளர் (இ. 1935)

1868 – மாக்சிம் கார்க்கி, உருசியப் புதின, நாடக எழுத்தாளர் (இ. 1936)

1874 – சாபுர்சி சக்லத்வாலா, இந்திய-பிரித்தானிய அரசியல்வாதி (இ. 1936)

1899 – ஹன்டி பேரின்பநாயகம், இலங்கை சமூக சேவையாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1977)

1904 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் (இ. 1973)

1922 – பா. நேமிநாதன், இலங்கை அரசியல்வாதி

1926 – போலி உம்ரிகர், இந்தியத் துடுப்பாளர் (இ. 2006)

1933 – மாஸ்டர் சிவலிங்கம், ஈழத்தின் சிறுவர் எழுத்தாளர், கதைசொல்லி (இ. 2022)

1936 – மாரியோ பார்க்காசு யோசா, நோபல் பரிசு பெற்ற பெரு எழுத்தாளர்

1940 – எஸ். ஜெபநேசன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்ட ஆயர்

1942 – டானியல் டெனற், அமெரிக்க மெய்யியலாளர்

1943 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (இ. 2018)

1945 – ரொட்ரிகோ துதெர்த்தெ, பிலிப்பீன்சின் 16வது அரசுத்தலைவர்

1968 – நாசர் ஹுசைன், இந்டிய-ஆங்கிலேயத் துடுப்பாளர்

1969 – பிரெட் ரட்னர், அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்

1970 – வின்ஸ் வுகஹன், அமெரிக்க நடிகர்

1982 – சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை

1985 – ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா, சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர்

1986 – லேடி காகா, அமெரிக்கப் பாடகி, நடிகை

இன்றைய தின இறப்புகள்

1552 – குரு அங்கது தேவ், சீக்கிய குரு (பி. 1504)

1584 – உருசியாவின் நான்காம் இவான், உருசியப் பேரரசர் (பி. 1530)

1899 – சுவாமி யோகானந்தர், இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1861)

1941 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1882)

1943 – சத்தியமூர்த்தி, இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1887)

1944 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர் (பி. 1884)

1947 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (பி. 1869]])

1969 – டுவைட் டி. ஐசனாவர், அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (பி. 1890)

1971 – பரலி சு. நெல்லையப்பர், தமிழக எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1889)

1991 – எச். வேங்கடராமன், தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1919)

2006 – வேதாத்திரி மகரிசி, இந்திய மெய்யியலாளர் (பி. 1911)

2017 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (செக் குடியரசு, சிலோவாக்கியா)