சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு நபர் மலைப் பாம்புக்கு ஆசையோடு முத்தமிட முயல்வதை பார்க்க முடிகிறது. அப்போது கடுப்பான அந்த மலைப் பாம்பு நபரின் மூக்கை கடித்து குதறி விடுகிறது. இதையடுத்து அந்த பாம்பிடம் இருந்து நபரை மீட்க அங்கிருந்தவர்கள் நீண்டநேரம் போராடினார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.