இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் அதிக கனமழையின் காரணமாக வீட்டின் முன்பு மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதை அடுத்து அங்கு மூதாட்டி ஒருவர் குடையை பிடித்தபடி வருகிறார். அவர் தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே செய்து செல்கிறார்.

இதை அடுத்து சிறிது வினாடியிலேயே எதிர் வீட்டின் சுவர் இடிந்து கீழே விழுகிறது. இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.