இந்த கால கட்டத்தில் மனிதநேயமும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும் குறைந்துவிட்டதாக எண்ணப்படும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 2 வாலிபர்கள் செய்த செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கனமழையால் பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டம் மல்லேயன் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 35 மாணவ-மாணவிகள் சிக்கினர். அந்த நேரத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையே சீர்குலைந்த நிலையில், மாணவர்கள் பயத்தில் கதறினர்.

இந்த தகவல் கிடைத்ததும், சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் என்ற இரு வாலிபர்கள் உடனடியாக ஓடி வந்து, கிராம மக்களின் உதவியுடன் மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். பள்ளிக்கு அருகே உள்ள பகுதி வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிய நிலையில், மாணவர்கள் மற்றொரு பக்கத்திற்குச் செல்ல வழியின்றி தவித்தனர். அப்போது இருவரும் உடலை பாலமாக வைத்து, அதன்மீது மாணவர்கள் ஏறிசென்று பாதுகாப்பாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினர்.

“>

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ள சூழ்நிலையில் மனிதநேய உதவி புரிந்த இந்த வாலிபர்களை, மல்லேயன் கிராம பஞ்சாயத்து சிறப்பு அமர்வில் கௌரவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு, இன்னும் இந்நாட்டில் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.