சமூக வலைதளங்களில் கணவன், மனைவி இடையேயான சண்டையைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த வீடியோ கொஞ்சம் விபரீதமானது. ஓடும் பைக்கில் கணவர் பின்னால் அமர்ந்து செல்லும் பெண் ஒருவர், தனது கணவரை 27 வினாடிகளில் 14 முறை தொடர்ந்து ஓங்கி ஓங்கி அறைகிறார்.

கணவனை வேறொரு பெண்ணுடன் பார்த்த ஆத்திரத்தில் அந்தப் பெண் இப்படி ருத்ரதாண்டவம் ஆடியதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பெண் ஆக்ரோஷமாகத் தாக்கியதில் பலமுறை பைக் நிலைதடுமாறியது.

ஒருவேளை பைக் கீழே விழுந்திருந்தால் பெரும் விபத்தே நடந்திருக்கும். ஆனால், இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அத்தனை அடி விழுந்தும் அந்த மனுஷன் கொஞ்சம் கூட ரியாக்ட் செய்யவில்லை.

பதில் தாக்குதல் நடத்தாமல் அமைதியாகப் பைக்கை ஓட்டிக்கொண்டே அடி வாங்கும் அந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “கணவன் கண்டிப்பா ஏதோ தப்பு செஞ்சிருப்பான், அதான் அமைதியா அடி வாங்குறான்” என ஒரு தரப்பும், “ரோட்டில் இப்படிச் செய்வது உயிருக்கே ஆபத்து” என மற்றொரு தரப்பும் கமெண்ட் செய்து வருகின்றனர்.