சமூக வலைதளங்களில் கிரிக்கெட் குறித்த பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜுபைர் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நகைச்சுவையான கிரிக்கெட் வீடியோ ஒன்று வெறும் நான்கு நாட்களில் 9 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளவில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “வேகப்பந்து வீச்சாளரை (Fast Bowler) எப்படி அடிப்பது என்று இன்று உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்” என்று பேட்ஸ்மேன் கூறுகிறார். வழக்கமாகப் பந்தை அடிப்பதற்கான நுணுக்கங்களை அவர் சொல்லப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, பந்து வீச்சாளர் பந்தை வீசிய அடுத்த நொடி, தனது கையிலிருந்த மட்டையை (Bat) வீசிப் பந்து வீச்சாளரையே அந்த இளைஞர் தாக்குகிறார்.
View this post on Instagram
“>
கிரிக்கெட் நுணுக்கம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கியவர்களைத் தனது அதிரடி நகைச்சுவையால் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த இந்த வீடியோ, 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
