காதல் என்றாலே பலருக்கும் கவிதைகளும் கிஃப்ட்டுகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு இளைஞர் தனது காதலியைப் புதுமையாகப் பிரபோஸ் (Proposal) செய்ய நினைத்து பர்கருக்குள் வைர மோதிரத்தை மறைத்து வைத்துள்ளார். பர்கரைச் சாப்பிடும்போது மோதிரத்தைப் பார்த்து காதலி நெகிழ்ந்து போவார் என்பதுதான் அந்த இளைஞரின் ‘பக்கா பிளான்’.

ஆனால், பர்கரின் சுவையில் மெய்மறந்த அந்த இளம்பெண், உள்ளே மோதிரம் இருப்பதைச் சற்றும் கவனிக்காமல், பர்கரோடு சேர்த்து அந்த வைர மோதிரத்தையும் அப்படியே விழுங்கிவிட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Інна Марей (@marexa_inna)

காதலி மோதிரத்தைப் பார்ப்பார் என்று ஆவலோடு காத்திருந்த காதலன், அவர் அதை விழுங்குவதைப் பார்த்து அப்படியே ஆடிப்போய்விட்டார். பர்கர் முடிய முடிய காதலனின் முகம் பயத்திலும் அதிர்ச்சியிலும் மாறுவதைக் காட்டும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

“அடுத்த முறை நிச்சயதார்த்தம் எக்ஸ்-ரே ரிப்போர்ட் வந்த பிறகுதான் நடக்கும் போல” என்றும், “சாப்பாட்டு ராமர்களிடம் இதுபோன்ற விளையாட்டுகளை வைத்துக்கொள்ளக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் அந்த இளைஞரைச் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.