
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மோடி 500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னவுடன்… அடுத்த அரை மணி நேரத்தில் நான் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தேன். இந்தியாவிலேயே எந்த தலைவனும் அரை மணி நேரத்தில் அதற்கு கருத்து சொல்லவில்லை. விடுதலை சிறுத்தைகள் சொன்னோம். நரேந்திர மோடி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தான் தோன்றித்தனமாக எதேச்சி அதிகாரமாக செயல்படுகிறார்.
இவருடைய போக்கை பார்த்தால் அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்ற முதல் குரல் சிறுத்தைகளின் குரல். உடனே நான் அறிவித்தேன்.. பாண்டிச்சேரியில் மாநாடு…. அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு மாநாடு. 10 ஆண்டுகளுக்கு முன்பு… கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்…. பத்தாண்டுகளுக்கு பின்பு இன்றைக்கு இந்தியா முழுவதும் அந்த குரல் ஒலிக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அம்பேத்காரை தவிர வேறு யாராவது அந்த வேலையை எடுத்திருந்தால் ? இப்படி ஒரு அரசியலைமைப்பு சட்டம் உருவாக்கி இருக்க முடியாது. இன்றைக்கு இந்தியாவிலேயே நடக்கின்ற யுத்தம் அம்பேத்காருக்கும், அம்பேத்கரை எதிர்க்கும் சனாதனத்திற்கும் இடையில் தான் யுத்தம் நடக்கிறது.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கும், சனாதன சக்திகள் பாதுகாக்க விரும்புகின்ற மனு சட்டத்திற்கும் இடையே தான் யுத்தம் தான் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.இந்தியா முழுவதும் நடைபெறுகிற விவாதம். அம்பேத்கர் கருத்தியலுக்கும், சனாதன கருத்தியலுக்குமான விவாதம். வெவ்வேறு மொழியில் பேசுவார்கள்… வெவ்வேறு டோன்ல பேசுவார்கள். ஆனால் அத்தனை பேருடைய குரலும் இன்றைக்கு அம்பேத்கரின் குரலாக ஒலிக்கிறது என தெரிவித்தார்.