நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, மாணவர்களே பெரியார் கேட்டார். இன்னைக்கு நீங்க எல்லாரும் இன்ஸ்டா பாப்பீங்க. facebook பார்ப்பீர்கள். டெய்லி ஒரு மூணு கூட்டம் வரும். மாடு மேய்க்கலாம், ஆடு மேய்க்கலாம். நான் உன்னை அதுவா ஆக்குறேன்…

இதுவா ஆக்குறேன் என சொல்வார்கள். யாரெல்லாம் உன்னை ஆடு மேய்க்க வர சொல்லுறாங்களோ, மாடு மேய்க்க வர சொல்லுறாங்களோ… அவுங்க அவுங்க வீட்டில் இரண்டு பிள்ளை இருக்கிறது. அவர்களை மேய்க்க சொல்லுவோம், நாங்கள் மருத்துவர்கள் தான் ஆவோம் என்பதை நீங்கள் உறக்கச் சொல்ல வேண்டும்.

எங்கள் தங்கை அனிதா இறந்த பொழுது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பேசினார்கள்.  ஏன் டாக்டர் தான் படிக்கனுமான்னு ?  ஆமாம்…!  டாக்டர் தான் படிப்போம்,  என்ஜினீயர் தான் படிப்போம். எங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதுதான்  படிப்போம்.இதை கேட்பதற்கு எங்கள் வரிப்பணத்தில் ஊண்டு கொழுக்கக்கூடிய  கூட்டத்திற்கு ஒருபோது உரிமை கிடையாது என்ற உணர்வோடு நீங்கள் இந்த கையெழுத்தை இட வேண்டும்.

பெரியார் தான் கேட்டார். தகுதி, திறமை பேசுகிறாய் அல்லவா. இந்த தகுதி,  திறமை பேசக்கூடியவர்கள்… பெரியார் மொழியில் சொல்லுகிறேன்…..  இது என்னுடைய மொழி இல்லை. எனவே யாராவது  எடுத்து  போடக் கூடியவர்கள் பெரியார் சொன்னதாக போடுமாறு  கேட்டுக்கொள்கிறேன். பெரியார் சொன்னார்.. தகுதி,  திறமை என்று பேசுற தானே… பேசுற எவனாவது ஒருத்தன் யோக்கியவனாக இருந்தால் ?

மானஸ்தனாக இருந்தால் ? ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் ? தகுதி, திறமைக்கு  ஒரே ஒரு எடுத்துக்காட்டை கூறிவிட்டு தகுதி,  திறமையை பற்றி பேசுங்கள். எடுத்துக்காட்டு சொல்லுங்கள். குஜராத்தில் உங்களுடைய விழுக்காடு என்ன ? எத்தனை மருத்துவ கல்லூரி வைத்திருந்தீர்கள் ?  மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா… குஜராத்தினுடைய மருத்துவ கல்லூரிகள் இழுத்து மூட வேண்டும் என்று சொன்னார்கள். உங்ககிட்ட சிகிச்சை கருவிகள் இல்லை என்று சொன்னார்கள்.

உத்தர பிரதேசம் கர்ப்பிணி பெண் மருத்துவம் பார்க்க வசதி இல்லை.  தெருவோரத்தில் மருத்துவம் பார்த்தார்கள். கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை உங்களுக்கு…  இதெல்லாம் பழைய கதை என்று சொல்லுவீர்கள்…. போன வாரம் குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மருத்துவர்கள்…  தமிழ்நாட்டைப் பார்த்து வியந்து பிரமித்து சென்றது போன வாரம்.  எதை வைத்து ?  இது தகுதியற்ற ஒரு மாநிலம் என்றும்,  நீட் தகுதியான தேர்வு என்று சொல்வது முதல் பொய் என தெரிவித்தார்.