செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திராவிட முன்னேற்ற கழகம் நீட்டை  எதிர்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  எதிர்ப்பது போல ஒரு நாடகம் ஆடுகின்றார். ஏன் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று செல்கின்றேன் என்றால், நீங்க பழைய வரலாற்றை விட்டுறுதீங்க. நீட்டை  கொண்டு வந்தது திமுக. நீங்களே ஒரு நோட்டிபிகேஷன் போடுவீங்க. உங்களுடைய மத்திய அமைச்சர் காந்திராஜ் அதுல அமைச்சராக இருப்பாரு. அப்ப நீங்க சரின்னு சொல்லுவிங்க..

நோட்டிபிகேஷன் போடுவீங்க. அதுக்கு அப்புறம் நீட்டை  எதிர்த்து கையெழுத்து போடுவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ?  இதுக்கு நீங்க பதில் சொல்லுங்க… நீட்டை  கொண்டு வந்தது யாரு ? நீட்ட கொண்டு வந்தது திமுகவும் – காங்கிரசும். இப்ப நானே  நீட்டை  எதிர்த்து கையெழுத்து போடுறேன்னு சொன்னா என்ன அர்த்தம் ? இதைத்தான் மரியாதைக்குரிய அண்ணன் ஜெயக்குமார் அழகா அறிக்கை கேட்டிருந்தார். நீங்க இந்தியா கூட்டணியில் இருக்கிறீங்க…  காங்கிரஸ் கிட்ட கையெழுத்து வாங்க முடியுமா ?

நீங்க போய் டெல்லியில் இருக்கக்கூடிய அரவிந்த் கெஜ்ரிவால் கிட்ட கையெழுத்து  வாங்க முடியுமா ? இந்தியா கூட்டணி கட்சி கிட்ட கையெழுத்து வாங்க முடியுமா ?  வாங்குங்க… ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுங்க. குறைந்தபட்சம் கூட்டணியில் ஒரு நிபந்தனையாவது விதிக்க சொல்லுங்க.  எங்களுக்கு நீட்ல விலக்கு வேணும். அதுக்கு அப்புறம் தான் இந்தியா கூட்டணியில சேருவோம்ன்னு ஒரு விலக்கு  கொடுக்க சொல்லுங்க,  நாங்க பாராட்டுறோம். வழி இல்லையே.. நீட் என்பது உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வின் அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கும் வந்துவிட்டது. எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதனால் தான் நாம விலக்கு  கேட்கிறோம் என தெரிவித்தார்.