அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அம்மாவுக்கு குடும்பம் இருந்துச்சா ? அம்மா கல்யாணம் பண்ணாங்களா ? இல்ல இல்ல என்ன பாருங்க ? மன உணர்வு….  அவங்க இரண்டு பேரும் தலைவரும்,  அம்மாவும் அரசியலின் அதிசய பிறவிகள்.  தலைவருக்கும் வாரிசு கிடையாது,  வாரிசு இருந்தது.  அரசியல் பக்கமே வர விடல. கோட்டை பக்கமே வர விடல.

இதே ஜானகி அம்மா பணங்கல் பார்க் அருகாமையில்…  அன்னைக்கு இருக்கக்கூடிய ஜவுளி கடையில் நோ பார்க்கிங்ல போய் வண்டியை நிப்பாட்டி இருக்காங்க.  அங்கு இருந்த டிராபிக் SI-க்கு  தெரியாது. டிராபிக்  SI பைன் போடுறாரு. உடனே அந்த பையனை புரட்சித்தலைவர் சொந்த காசில் கட்டுனாரு. ஒரு முதலமைச்சர் தன் மனைவி செய்த தவறுக்காக…  அந்த டிரைவரை உடனே கண்டிச்சாரு.  இது மாதிரி எங்கேயாச்சும் நடக்குமா?  அதிசயம் நடக்குமா ? கோட்டை பக்கமே வர விடல.

அண்ணாவும் அப்படித்தான் செஞ்சாங்க. அம்மாவும் அப்படித்தான் செஞ்சாங்க.  வாரிசு அரசியலை கொண்டு வர விட வில்லை. இந்த இயக்கத்தில் வாரிசு என்றால் யாரு ? நம்ம தான்… நீங்க தான் வாரிசு… இங்க இருக்க தம்பி…  இவங்க மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர், கவுன்சிலர்கள்  நாங்க தான் வாரிசு. அதுதான் எங்க அம்மா இன்னும் உயிரோடு,  உணர்விலும் கலந்திருக்கிறார், என் தலைவன் உயிரில் இருக்கின்றான் என தெரிவித்தார்.