தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடு வீடாகச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.