கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களில் மரநாய் சுற்றி திரிகிறது. இந்த மரநாய் தென்னை மரங்களில் இருக்கும் இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மரநாயை பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். நேற்று கூண்டிற்குள் இருந்த தேங்காயை சாப்பிட வந்தபோது மரநாய் கூண்டிற்குள் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மரநாயை மீட்டு ஆழியாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.