குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்திலுள்ள பார்டி பகுதியில் வியப்பளிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர்ப்பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அலி அன்சாரி என்பவர், ஆசியாவின் இரண்டாவது அபாயகரமான விஷப் பாம்பான ரஸ்ஸல் வைப்பர் பாம்பை துணிச்சலுடன் மீட்டுள்ளார்.
गुजरात: वलसाड जिले के पारडी में एक हैरान कर देने वाली घटना सामने आई है। जीवदया ग्रुप के अली अंसारी ने अपनी जान जोखिम में डालकर एशिया के दूसरे सबसे ज़हरीले सांप रसेल वाइपर की जान बचाई.#Gujarat | #ViralVideo pic.twitter.com/F4vabWzcOe
— NDTV India (@ndtvindia) December 6, 2025
ஜீவ்தயா குழுவின் உறுப்பினரான அலி அன்சாரி, தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், அந்தப் பாம்பின் வாயில் சிறிய அளவில் பைப்பை வைத்து அதில் தன் வாயை வைத்து உறிஞ்சி உயிரை காப்பாற்றிய செயல் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த கொடிய விஷப் பாம்பை மிகவும் கவனத்துடன் மீட்டுள்ள அலி அன்சாரியின் துணிச்சலும் உயிர்காக்கும் செயலும் பாராட்டத்தக்கது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
