உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கரில் சனிக்கிழமை மாலை ஒரு இளைஞர் ஓடும் ரயிலின் மேல் ஏறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசி விஸ்வநாத் விரைவு வண்டியின் கூரை மீது ஏறிய அந்த இளைஞர், எவ்வித பயமுமின்றி நடந்து சென்றார். உயரழுத்த மின்கம்பிகள் ஊடே ஓர் பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்குச் சென்றார். சுமார் 700 மீட்டர் தூரம் வரை அவர் இவ்வாறு நடந்துள்ளார்.
उत्तर प्रदेश के प्रतापगढ़ में शनिवार शाम एक युवक काशी विश्वनाथ एक्सप्रेस की छत पर चढ़ गया, जिससे रेलवे में हड़कंप मच गया। युवक के ट्रेन से उतरने से इंकार करने पर रेलवे ने तुरंत ओवरहेड लाइन की बिजली आपूर्ति बंद कर दी, जिससे बड़ा हादसा टल गया। करीब 40 मिनट तक ट्रेन रुकी रही और… pic.twitter.com/QqmkMfLmqH
— AajTak (@aajtak) December 6, 2025
ரயிலின் மேல் நடந்து சென்றதைக் கண்ட பயணிகள் கைப்பேசியில் காணொளி எடுக்கத் தொடங்கினர். கீழே இறங்கும்படி கூறியும், அவர் மறுத்துவிட்டார். தகவல் அறிந்து ரயில்வேத் துறை உடனடியாக மின் சப்ளையைத் துண்டித்தது. சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, ரயில்வேக் காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் தன் உயிரைப் பணயம் வைத்து போராடி அவரை கீழே இறக்கினார்.
இந்தச் சம்பவத்தால், பிரயாக்ராஜ் – லக்னோ ரயில் பாதையில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்துத் தடைபட்டது. ஆறு ரயில்கள் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. இளைஞர் மீட்கப்பட்ட பிறகே ரயில்கள் மீண்டும் புறப்பட்டன. புதுடெல்லியில் இருந்து மண்டுவாடீஹ் வரை செல்லும் காசி விஸ்வநாத் விரைவு வண்டி, மாலை 4:20 மணியளவில் மா பெல்ஹா தேவி தாம் ரயில் நிலையத்தை அடைந்தது. மாலை 4:30 மணிக்கு முகமது அனஸ் என்ற இளைஞர் ரயிலின் கூரை மீது ஏறினார்.
அவரைத் தடுக்க முயன்றும், அவர் நிராகரிக்கவே, ஓடும் ரயிலின் மேல் நடக்கத் தொடங்கினார். சுமார் நான்கு பெட்டிகள் தூரம் அவர் நடந்தார். தகவல் அறிந்த ரயில்வேத் துறை மின்சாரம் துண்டித்து, ரயிலை நிறுத்தியது. ரயில்வேக் காவலர் அவரைத் துரத்திச் சென்று மாலை 5:10 மணிக்கு பாதுகாப்பாகக் கீழே இறக்கி கைது செய்தார்.
முகமது அனஸ் (வயது 27) சந்த்கபீர்நகரைச் சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது என்றும் ரயில்வேக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
