அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அங்கு நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும், அதன் அருகே ஒரு இளம்பெண் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

 

அப்போது எதிர்பாராத விதமாக மிக அதிவேகமாக வந்த ஒரு கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்தக் கார் அந்த இளம்பெண்ணைத் தொடாமல் மறுபக்கம் தூக்கி வீசப்பட்டு தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் அந்த இளம்பெண்ணிற்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் அவர் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பினார்.

விபத்தின் கோரத்தைக் கண்டு நிலைகுலைந்த அவர், உடனடியாக அங்கிருந்து ஓடிச் சென்று தனது உயிரைப் பாதுகாத்துக் கொண்டார். இந்த பதைபதைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடவுளின் அருளால் மட்டுமே அந்தப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.