இன்றுடன் ஜுன் மாதம் முடிவடைந்து, நாளை ஜூலை தொடங்கவுள்ள நிலையில் மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில் அதிரடி மாற்றங்கள் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. அதன்படி, நாளை முதல் 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். அந்த அடிப்படையில் இந்த முறை 14 கிலோ எல்பிஜி சிலிண்டர் விகிதமும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் மாதம் வர்த்தக எரிவாயுவின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆகவே LPG சிலிண்டர் விலைகள் ஜூலை 1, 2023 அன்று அப்டேட் செய்யப்படும். சென்ற 3 மாதங்களாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.