ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வேயானது பல வசதிகளை செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இவ்வசதி கிடைக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

IRCTC விதியின் அடிப்படையில் பயணிகளுக்கு இலவச உணவு வசதியானது அளிக்கப்படுகிறது. உங்களின் ரயில் இலக்கை அடைய 2 மணிநேரம் (அ) அதற்கு மேல் தாமதம் ஆகும் போது இந்த வசதியானது கிடைக்கும். எனினும் இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும் இந்த ரயில்களில் பயணம் செய்து, ரயில் தாமதமானால் நிச்சயம் இலவச உணவு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ரயில்வே விதிகளின் அடிப்படையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளும் இவ்வசதியை பெறுகின்றனர்.