பணிப்புரியும் இடத்துக்கு முறையான உடைகள் அணிந்து வர வேண்டுமென பீகார் அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி கலாச்சாரத்துக்கு எதிரானது என்பதால் மாநில கல்வித் துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய சாதாரண உடைகளை அணிந்து வரக்கூடாது என்று பீகார் அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்த உத்தரவை நிர்வாக இயக்குனர் சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்து உள்ளார். கல்வித்துறை பிறப்பித்த இந்த உத்தரவில் ஊழியர்கள் அலுவலகங்களில் முறையான உடைகளை அணியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாதாரண உடையில் அலுவலகத்திற்கு வருவது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் முறையான உடையில் அலுவலகத்திற்கு வந்து கண்ணியத்தை பராமரிக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.