கேரள மாநிலத்தில் திருநங்கைகள் சமூகத்தில் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கேரள சமூக நீதித்துறை அறிவு பொருளாதாரம் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதோடு திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் அடிப்படையில் பிரைட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்வதற்காகவும், மீள் திறன் பெறும் வாய்ப்புகளை பெறுவதற்காகவும் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது கேரள மாநிலத்தில் திருநங்கைகளுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக ஒரு புது தளம் உருவாக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பணியாளர் மேலாண்மை அமைப்பு என்ற தளத்தின் வாயிலாக கூடுதல் திறன் கையகப்படுத்துதல் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேரளா அகாடமி வாயிலாக திருநங்கைகள் தங்களுக்கான திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி வருங்கால வேலை வாய்ப்புக்காக இந்த அமைப்பு உபயோகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.