தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளியாகிய விக்ரம் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து இருப்பார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுபற்றி ராகவா பேசியதாவது, நான் தான் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். எனினும் கால்ஷீட்  இல்லாத காரணத்தால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இப்போது நான் மீண்டுமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்கப்போகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.