குஜராத்தில் இன்ஜினியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டு சமையல்காரர் பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களா ஒன்றை சொத்தாக எழுதி வைத்துள்ளார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்தை இளம் பெண் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஸ்டாத் போர்ஜோர்ஜி என்பவர் வசித்து வருகிறார். இன்ஜினியர் ஆன இவர் டாடா நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். திருமணமாகி தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த அவருக்கு குழந்தை இல்லை.
கடந்த 2001 ஆம் ஆண்டு அவருடைய மனைவி இறந்துவிட்டார். அப்போது வீட்டில் சமையல் வேலைக்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவருடன் அவருடைய பேத்தியான அமிஷா மக்வானாவும் தங்கி இருந்துள்ளார். சிறுமி அமிஷா மீது அளவற்ற பாசம் வைத்த குஷ்டாத் சிறுமியின் கல்விச்சலவை ஏற்றுக் கொண்டார். அதன் பின் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 89 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர்தான் இறப்பதற்கு முன்பாக தனக்கு சொந்தமான சொகுசு பங்களாவை அந்த சிறுமியின் பெயருக்கு உயிர் எழுதி வைத்துள்ளார்.
அப்போது அமிஷா சிறுமியாக இருந்ததால் அவர் வளர்ந்ததும் அவருக்கு அந்த சொத்து கிடைக்கும் என்று அந்த உயிரிலிருந்தது. சிறுமி 18 வயதை கடந்ததும் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது வக்கீல் மூலம் உயிரின் மீதான உரிமை கோரி அகமதாபாத் கோட்டில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம் அமிஷாவுக்கு சான்றிதழ் வழங்கினர். இதை அடுத்து கடந்த இரண்டாம் தேதி அமிஷாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு எழுதிவைக்கப்பட்ட உயில்படி சொத்து வழங்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது இன்ஜினியர் குஸ்டாத் எனக்கு தாயும் தந்தையுமாக இருந்தார். என்னை தத்தெடுக்க விரும்பினார். ஆனால் மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அவர் அதை செய்யவில்லை. எல்லா வகையிலும் பின்பற்றிய அவர் விவாகரத்திலும் அவரை பின்பற்றி ரத்த உறவில்லாத எனக்கு இந்த சொத்தை வழங்கியுள்ளார் என்று நெகழ்ச்சியுடன் கூறினார்.
