சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில், புயல் சிக்ஸர் ஒன்றை அடிக்கிறார் ஒரு பெண். அதுவும் புர்கா அணிந்த நிலையில் மட்டையுடன் சக்திவாய்ந்த ஷாட் ஒன்றை விளையாடுகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹபீசா என்ற அந்த பெண், தனது வீடியோவை @artist_kpk_haripur என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அரண்மனை போன்ற இடத்தில் இரவில் கிரிக்கெட் ஆடும் குழுவுடன் கலந்துகொண்டு, நேராக சிக்ஸர் அடிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
அந்தப் பெண் அடிக்கும் ஷாட்டின் நேர்த்தியும், கம்பீரமும், தொழில்முறை வீராங்கனைக்கு இணையாக இருந்தது. அந்த வீடியோ தற்போது 5 கோடியைத் தாண்டும் பார்வைகளையும், 28 லட்சத்திற்கும் மேல் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒருவர், “விராட் கோலியைவிட ஆபத்தானவர்!” எனக் கூற, இன்னொருவர் “தலா அல்ல, கலா” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். சிலர் அவரை ஷாஹித் அப்ரிடி, டிவில்லியர்ஸ் பேட்டிங் பாணிக்கு ஒப்பிடும் அளவிற்கு போற்றியுள்ளனர்.
இந்த வீடியோவின் சிறப்பு என்னவென்றால், கிரிக்கெட்டின் எல்லைகளையும் சமூக விலகல்களையும் உடைத்து, ஒரு பெண் தனது திறமையை நிரூபிக்கிறார் என்பது தான்.
புர்கா அணிந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வீடியோ பகிர்ந்த ஹபீசாவின் செயல், பெண்களின் சக்தி மற்றும் திறமையை வலியுறுத்தும் வகையில் உள்ளதாகவே நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற வீடியோக்கள் பெண்கள் குறித்த பாரம்பரிய தருணங்களை மாற்றும் பொறுப்புள்ள முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
