அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2025 WWE சம்மர்ஸ்லாம் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டியின் போது, ரிங் பக்கத்தில் இருந்த இரண்டு பெண் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சில நிமிடங்களில் அவர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சண்டையை பார்த்த பிற ரசிகர்கள் அவர்களை பிரிக்க முயன்றும், இருவரும் அடிபிடியில் இறங்கியதை தடுக்க முடியவில்லை.
Hello Wrestling Fans 🫱🏽🫲🏾
Meanwhile at @SummerSlam 😂😅🤣@WWE #WWE #SummerSlam #RIPHULKHOGAN #HulkHogan
Follow us: @TheMegaPowersTv
— The Mega Powers 🫱🏽🫲🏾 ☥ (@TheMegaPowersTv) August 4, 2025
பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து, இருவரையும் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ @TheMegaPowersTv என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
2025-ஆம் ஆண்டு நடைபெறும் 38வது WWE சம்மர்ஸ்லாம் நிகழ்வில், ரிங்கில் சண்டைபோடும் வீரர்களை விட, வெளியில் சண்டைபோடும் ரசிகைகள் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். போட்டி எவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும், இந்த பெண்கள் இடையே நடந்த சண்டை தான் தற்போது இணையத்தை அதிர வைத்திருக்கும் செய்தியாக மாறியுள்ளது.
