ரஷ்யாவின் கம்சட்கா என்ற பகுதியில் உள்ள கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை, 600 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவில் ஏற்பட்ட பெரிய பூகம்பம் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த எரிமலை கடைசியாக 1463-ம் ஆண்டு வெடித்ததற்குப் பிறகு எந்த செயல்பாடும் இல்லை. ஆனால் இப்போது திடீரென சாம்பல் மற்றும் புகையுடன் வெடித்துள்ளது. சாம்பல் மேகம் 6,000 மீட்டர் உயரம் வரை எழுந்ததாகவும், இது மனிதர்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கவில்லை என்றும் ரஷ்ய அவசர சேவை துறை தெரிவித்துள்ளது.
VOLCANO THAT’S BEEN NAPPING FOR 600 YEARS JUST WOKE UP IN RUSSIA
Scientists think a huge earthquake in Russia’s Far East might have been the alarm clock.#Russia #earthquake #valcano pic.twitter.com/f1pwTR1Hkf
— ViralVolt🟦 (@ViralVolT1) August 3, 2025
“>
இந்த எரிமலை வெடிப்பால் விமானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், விமான துறையில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவனத்துடன் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த எச்சரிக்கையால் அந்த பகுதிக்கு செல்லும் விமானங்கள் பாதிக்கப்படலாம். இதனால், தற்போது அந்த பகுதி உலகளவில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
