துருக்கி நாட்டில் போதை மற்றும் குழப்பத்தின் உச்சகட்டமாக அரங்கேறிய ஒரு விசித்திரமான மற்றும் அதே சமயம் உலகையே வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த உண்மைச் சம்பவம் இணையத்தில் மீண்டும் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ‘பேய்ஹான் முத்லு’ (Beyhan Mutlu) என்ற நபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் காட்டின் அருகே மது அருந்தியுள்ளார். போதையின் நடுக்கத்தில் அவர் நண்பர்களை விட்டுப் பிரிந்து தனியாகக் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றுவிட்டார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிப்போன அவரது நண்பர்களும், உள்ளூர் அதிகாரிகளும், தன்னார்வலர்களும் சேர்ந்து அவரைத் தேடுவதற்காக ஒரு பெரிய தேடுதல் குழுவை (Search Party) அமைத்துக் காட்டுக்குள் தேடத் தொடங்கினர்.
இங்குதான் அந்த உலக மகா காமெடி ட்விஸ்ட் அரங்கேறியது! காட்டில் தேடுதல் குழுவினர் டார்ச் லைட்டுடன் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்த பேய்ஹான் முத்லு, போதை தலைக்கேறிய நிலையில், அவர்கள் தேடுவது தன்னைத்தான் என்று தெரியாமலேயே அந்தத் தேடுதல் குழுவில் தானும் ஒருவராக இணைந்து கொண்டார். பல மணி நேரமாகv அவரும் அந்தத் தேடுதல் குழுவினருடன் சேர்ந்து, “பேய்ஹான் முத்லு.. எங்கே இருக்கிறாய்?” என்று தன் சொந்தப் பெயரைத் தானே கத்தித் தேடி வந்துள்ளார். விடியற்காலையில் தேடுதல் குழுவில் இருந்த ஒருவர் சத்தமாக “பேய்ஹான் முத்லு!” என்று மீண்டும் கூப்பிட, உடனே அருகில் இருந்த அவர், “ஆமாம், நான் இங்கதான் இருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கூட்டத்தினர், தாங்கள் விடிய விடியத் தேடிய ”ஏப்பா…. யாரை தேடுறீங்க? நானும் வர்றேன்” காணாமல் போனதாக தேடப்பட்ட நபர்: தன்னைத்தானே தேடிய போதை ஆசாமி…. உலகையே சிரிக்க வைத்த விசித்திரம்….!!நபர் இவ்வளவு நேரம் தங்களின் பக்கத்திலேயேதான் நின்றுகொண்டிருந்தார் என்பதைv உணர்ந்து வாயடைத்துப் போயினர். இந்த ஆபத்தான தேடுதல் வேட்டை, ஒரு விசித்திரமான நகைச்சுவை சம்பவமாக முடிந்தது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
