தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஓட்டுப் போட்டவர்களும் போடாதவர்களும் தற்போது கவலைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்ததையும், தினம் ஒரு திட்டத்துடன் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கக் கொண்டு வரப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

திமுக ஆட்சியில் மாவட்டங்கள் தோறும் வேலைவாய்ப்புகள் பெருகியதையும், அந்தத் திட்டங்களின் மூலம் தனது பெயர் மக்களிடையே நிலைத்து நிற்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை விடக் குறைவான இடங்களே கிடைத்துள்ளதால், திமுக ஆதரவில் அந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த வண்டி எப்போது நிற்கும் என்று தெரியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்றும், எனவே திமுகவினர் தேர்தல் பணிகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் நலனைக் காக்கும் பொறுப்பு திமுகவுக்குத்தான் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் எல்லாவற்றையும் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.