“இனிமே என்னால இந்த அளவுக்குக் களத்துல இறங்கிப் போராட முடியாது, அந்தப் போராட்ட குணமே என்கிட்ட தீர்ந்து போச்சுன்னு என் மனைவிகிட்டயே அழுது புலம்பிட்டேன்!” என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது திடீர் ஓய்வு முடிவை அறிவித்து ஒட்டுமொத்த விளையாட்டு உலகையுமே அதிர வைத்துள்ளார்.
ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமில் சக வீரர்களிடம் தனது ஓய்வு முடிவை ஸ்டோக்ஸ் பகிர்ந்துள்ளார்.
அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம், உடல் ரீதியான சோர்வு மற்றும் இரவு விடுதி ஒன்றில் சக வீரருடன் சேர்ந்து ரக்பி வீரரிடம் ஏற்பட்ட தகராறு போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதே இந்த 35 வயது ஆல்-ரவுண்டரின் திடீர் ஓய்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
“I said to my wife ‘I don’t actually think I have anymore fight left in me to get over this to be honest.'”
Ben Stokes explains his decision to retire 🔊 pic.twitter.com/NcLDpdJCy7
— Sky Sports Cricket (@SkyCricket) June 28, 2026
“>
50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரை வென்று கொடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களையும் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஜாம்பவான் பென் ஸ்டோக்ஸின் இந்த நெகிழ்ச்சியான விடைபெறல் தற்பொழுதுகிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
