பளபளக்கும் புர்ஜ் கலிஃபா, அந்தஸ்தின் உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள், ஆடம்பர வாழ்க்கை என நினைத்த உடனே நம் கண்ணுக்குள் வந்து போகும் துபாய், உலகப் பணக்காரர்களின் சொர்க்கபுரி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, துபாயின் வெறித்தனமான பணக்கார லைஃப்ஸ்டைலை அடுத்த லெவலுக்குக் கொண்டு போய்க் காட்டியுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், “நான் இப்பவே என் ஐடி வேலையை ரிசைன் பண்ணிட்டு துபாய் பீச்ல குப்பை வாரப்போறேன்” என்று காமெடியாக கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது.

வழக்கமாக உலக நாடுகளின் கடற்கரைகளில் துப்புரவுப் பணியாளர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களையும், குப்பை கூளங்களையும் தான் அள்ளுவார்கள். ஆனால், துபாய் பீச்சில் நிலைமையே வேறு அங்குள்ள ஒரு துப்புரவுப் பணியாளர் மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்துக்கொண்டு மணலில் தேடும் போது, தடிமனான தங்கச் சங்கிலிகள், வைர மோதிரங்கள் மற்றும் உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டான ‘ரோலக்ஸ்’ (Rolex) வாட்ச் ஆகியவை மணலுக்குள் புதைந்து கிடப்பது அம்பலமாகியுள்ளது. பணக்கார சுற்றுலாப் பயணிகள் விளையாடும் போது தொலைத்த இந்த ராயல் பொருட்கள், சட்டப்படி அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றாலும், துபாய் பீச் மணலுக்குள்ளேயே ஒரு குட்டி தங்கச் சுரங்கமே ஒளிந்திருக்கிறது என்பதைத் தான் இந்த வீடியோ உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mundo Post (@mundopost)