இஸ்ரேல் நாட்டினருக்கும் பாலஸ்தீன நாட்டினருக்கும் இடையேயான போர் ஆரம்பித்து 2 வருடங்கள் கடந்தது. ஆனால் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இதுவரை போரில் குழந்தைகள் பெண்கள் உட்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அதற்கான பேச்சுவார்த்தை நடத்த முடிவு‌ செய்த நிலையில் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் அமைப்பினர் ஒரு நிபந்தனை விதித்துள்ளது. அதில் பாலஸ்தீன நாட்டினை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டினர் விதித்த நிபந்தனைகளை‌ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்திய கிழக்கு தூதரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ஹமாஸ் அமைப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹமாஸ் அமைப்பினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது, “பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம். பாலஸ்தீன நாட்டை முழு இறையாண்மை கொண்ட நாடாக நிறுவாத வரை ஆயுதங்களை கீழே போட மாட்டோம்.

எங்களால் எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளனர். காசாவில் உணவுக்காக ஏங்கும் மக்கள் மீது இஸ்ரேல் நாட்டினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துவதாக குற்ற‌சாட்டுகள் உள்ளது. இந்த தாக்குதலால் நிவாரண உதவி மற்றும் உபயோக மையங்களை சுற்றி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.