சீனாவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பாசிஃபையர்கள் தற்போது பெரியவர்களிடையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

“மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க” இது உதவுகிறது என நம்பும் மக்கள், அந்த கருவியை பயன்படுத்தும் எண்ணிக்கை நாளே நாளாக அதிகரித்து வருகிறது. பசிக்கும் குழந்தைகளுக்கான  டம்மி, சூதர், பிங்கி போன்ற பெயர்களில் அறியப்படும் இந்த உதிரிப்பொருள், ஆன்லைன் தளங்களில் ₹120 முதல் ₹6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் 2,000 யூனிட்டுகள் வரை விற்பனையாகி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்கள், “இதன் மூலம் புகைபிடிப்பை விட்டுவிட முடிந்தது”, “வேலையின் அழுத்தம் அதிகமாக இருக்கும்போது இதை உறிஞ்சினால் நிம்மதியடைகிறேன்” என்று பாராட்டுகிறார்கள். குழந்தைப் பருவ பாதுகாப்பு உணர்வை மீண்டும் தருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் இந்த போக்கை மிகுந்த கவலையுடன் நோக்குகிறார்கள்.

பல் மருத்துவர் டாக்டர் டாங் காமின் கூறுவதாவது, “ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பாசிஃபையரை உறிஞ்சுவது பற்கள் நகர்வதற்கும் தாடையின் அமைப்பு மாறுவதற்கும் காரணமாகும். தொற்றுகள், பேச்சு குறைபாடுகள், மூச்சுத் திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்” என்றார்.

மேலும், இது மன அழுத்தத்திற்கு தீர்வாக இருக்காது; உண்மையான காரணங்களை தவிர்க்கும் முறையாக மாறக்கூடும் என உளவியலாளர்களும் எச்சரிக்கின்றனர். எனவே, பாசிஃபையர்களை “பரிந்துரைக்கப்படாத நம்பிக்கைக்கருவி” என்றே மருத்துவர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.