இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், பல துறைகளில் மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் மாற்றிக்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு உதாரணமாக, அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் உள்ள ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் ஒருவர், தொலைதூரத்தில் இருந்து ஒரு மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படுகிறார். அந்த ஓட்டலில் வரவேறும் மேசையில் உள்ள டிஜிட்டல் திரையின் வழியாக, அவர் வாடிக்கையாளர்களுடன் நேரடி உரையாடலில் ஈடுபடுவது போல் காணப்படுகிறது.
வந்த விருந்தினர்களிடம் அவர் பேசுவதும், ஓட்டல் விதிமுறைகள் மற்றும் அறை வழிகாட்டுதல்களை சொல்லுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் பலர் அதை பகிர்ந்து வருகின்றனர். ஒருபக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் நிலையில், மறுபக்கம், “இந்த நவீன முறைகள் காரணமாக மனிதர்களின் வேலைகள் பாதிக்கப்படும்” எனும் கவலையும் பலரிடையே வெளிப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
