ஐரோப்பிய நாடுகளில் அதிகமான செயல்படும் எரிமலைகளை கொண்டுள்ள நாடாக விளங்கும் ஐஸ்லாந்தில், 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஒன்பதாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.
இந்த வெடிப்பு, அந்நாட்டின் வனப்பகுதிகளில் கடும் நில அதிர்வுகளுடன் ஏற்பட்டு, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உலகளவில் இயற்கை சீற்றம் அதிகமாகவே தெரிவிக்கப்படும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐஸ்லாந்தில் மட்டுமின்றி, இது போன்ற அடுத்தடுத்து ஏற்படும் எரிமலை வெடிப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
