இந்தியாவிற்கு எதிராக இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூஸ்18 குழுமத்திற்கும் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இறக்குமதி வரி ஏற்கனவே 26 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க விடுதலை நாளை முன்னிட்டு அதனை ஒரு சதவீதம் குறைத்து 25 சதவீதமாக மாற்றியிருந்த டிரம்ப், தற்போது அந்த வரியை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்த உள்ளதாகக் கூறியுள்ளார். புதிய வரி உயர்வு ஜூலை 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்கினால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரியுடன் கூடுதல் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். பரஸ்பர வரி விதிப்பு முறையின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
