செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், பாராளுமன்ற தேர்தலில் எப்படி போட்டியிடலாம் என நாங்க எல்லாரையும்  கலந்து கொண்டு தான் முடிவு பண்ண முடியும். தனிச்சையாக சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக கப்பை தட்டுறோம், தூக்குறோம்…  அதுதான் எங்கள் லட்சியம்.அரசியலில் பதவிக்கு வருவதற்கு தான் நாங்கள் இறங்குகின்றோம்.  மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கு தான்.

நாம் முதலே  சொன்னான் பாருங்க…  முல்லைக்கொடி படர வேண்டும் என்றால்,  எட்டி மரமாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.  புட்டி  மரமாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு வேண்டியது மக்களுக்கான அடிப்படை  அரசியல் உரிமை. அதை பெரியார் சொல்லி இருக்காரு…  நான் சொல்றத நம்பாத…. சொல்றத செய்யாத….  மானமும்,  பகுத்தறிவும் மனிதருக்கு அழகு. அதை சொல்லி இருக்காங்களா இல்லையா ?

மானத்தோடு தமிழன் வாழனுமா இல்லையா ? தமிழனை  பிரதமராக மாற்றணுமா இல்லையா ? மீனிவர்களை இன்னும் அடிப்படாமல் காப்பாத்தணுமா இல்லையா ?   என்ன செஞ்சிட்டு இருக்காங்க இவங்க ? 40 MP வச்சி இருந்தார்களே… இந்த அஞ்சு வருஷத்துல என்ன பண்ணாங்க ? நாங்க யாரு கூடையும்  சேர்வோம்.  இன்னும் முடிவு எடுக்கல. எங்களுக்கு அதிகமான தொகுதிகள் வேணும்… நான் சொன்னேனே என பேசினார்.