செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்றைக்கு அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாள்…  இன்றைக்காவது தமிழ்நாட்டில் நாங்கள் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற அறிவிப்பு வருமா ? என்ற ஏக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். திராவிட மாடல்,  திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் அவர்கள்..  இன்று திராவிட மாடல் என்றால்,  தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மது குடிக்காமல் இருக்க முடியாத ஒரு சூழலில் இருக்கின்றார்கள்.

இதுதான் உங்களுடைய திராவிட மாடலா ? இதுதான் உங்கள் அண்ணா அவர்களுடைய கனவா ? உங்கள் கட்சியினுடைய நிறுவனர் உடைய ஆசை,  அவருடைய கொள்கை தமிழ்நாட்டிலேயே பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது….  இன்றைக்காவது நீங்கள் அறிவியுங்கள்…  நாங்கள் படிப்படியாக கொண்டு வருவோம்…  முதல் கட்டத்தில் இவ்வளவு கடைகளை நாங்கள் மூடுவோம் என்றெல்லாம் ஒரு அறிவிப்பு வெளிவர வேண்டும்,  இது எங்களுடைய கோரிக்கை…

எங்கள் கட்சியினுடைய பொதுக்குழுவிலேயே சொல்லி இருந்தோம்…  கஞ்சா விற்பனை வந்து தமிழ்நாட்டில் சரளமா இருக்கு….  எங்க பாத்தாலும் கஞ்சா வித்துட்டு இருக்காங்க… மோசமான சூழல் இருக்கிறது… காவல்துறை முதலமைச்சர் இடம் இருக்கிறது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவல்துறைக்கு தெரியாம யாரும் கஞ்சா விற்க முடியாது.  இப்ப கஞ்சா மட்டும் இல்ல,  அபின் –  கொக்கேன் – ஹெராயின் எங்க பார்த்தாலும் கிடைச்சுட்டு இருக்கு…  இவங்க 56 ஆண்டு காலம் ஆட்சி செய்து,  இரண்டு தலைமுறையை மதுவை கொடுத்து…

நாசப்படுத்தி விட்டார்கள்…   இப்போது இந்த கஞ்சா பழக்கத்தால் இருக்கின்ற தலைமுறையும் நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை தடுக்க அரசு நடவடிக்கை எல்லாம் போதுமானது கிடையாது…  இன்னும் எடுக்கவே இல்லைன்னு நான் சொல்லுவேன்.. சும்மா எப்ப பார்த்தாலும் கஞ்சா டிரைவ்  1.o,  2.0, 3.o தான் வருது..  நாங்க இவ்வளவு பேரை கைது பண்ணோம்,  எல்லாம் பண்ணோம் என்றாலும்  வித்துட்டு இருக்காங்க..  ரொம்ப ஒரு மோசமான சூழல் இருக்கிறது என தெரிவித்தார்.