தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  தென் தமிழகத்திலேயே கனமாக மழை பெய்த போது திருநெல்வேலி மேயர் எங்கிருந்தார் தெரியுமாங்கய்யா ? சேலத்தில் நடக்கக்கூடிய இளைஞர் அணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுட்டு இருந்தார். திருநெல்வேலியில் மழை பெய்து ஆளு இல்லை.  மழை வந்துடுச்சி, பார்வையிட யார் போகணும் ?  உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேருவும்,  பொதுபணித்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் போகனும்… ஆனால்  போய் பார்த்தது யாரு ? உதயநிதி ஸ்டாலின்….  முதல்வரை பொறுத்தவரைக்கும் தெளிவாக இருக்கின்றார்.

சேலம் இளைஞர் அணி மாநாடு முடிந்த பின்போ அல்லது பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு எப்பயாவது உதயநிதி ஸ்டாலின துணை முதல்வர் ஆக்குவதற்கு இதெல்லாம் ட்ரையல். F4 சென்னையில்  42 கோடிக்கு நடத்தணுமா ?  நடத்திக்கோ, நடத்தி பாருப்பா…. ஏனென்றால் அவுங்களுக்கு அந்த போட்டோ வேணும்….    உதயநிதி ஸ்டாலின் கூட எல்லாரும் உக்காருற போட்டோ வேணும்….

செஸ் ஒலிம்பியாட் நடத்தலாமா ? செஸ் ஒலிம்பியாட் நடத்தும் போது அந்த போட்டோ வேணும்….  அதை தாண்டி டென்னிஸ் நடத்தலாமா ?  அதுக்கு அந்த  போட்டோ வேணும்….  இதை தாண்டி ஏதாவது ஒரு நிறுவனத்தை கொண்டு வந்து பண்ணலாமா ?  போட்டோ வேணும். அவரு கோர்ட் சூட் போடணும், பக்கத்துல ரெண்டு பேர் இருக்கணும்….

அந்த காட்சி தொலைக்காட்சியில் வரணும்…. ஓஹோ…. அப்போ உதயநிதி ஸ்டாலின் அறிவாளியாகி விட்டார் என்று தமிழக மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக……  எப்படி சினிமா படத்துல ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடி,  பட்டாசு வெடித்து…. கால் ஷூ வை  காட்டி,  ஷூ – லேஸை காட்டி… பட்டன காட்டி…. பேட்டை காட்டி…. பெல்ட்டை காட்டை…

அப்புறம் பார்த்தீங்கன்னா சட்டையெல்லாம் காட்டி, அப்புறம்  முகத்தை காட்டுற மாதிரி…. இப்போ உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடந்து கொண்டு இருக்கின்றது. அது சேலம் இளைஞரணி மாநாடு, அது முடிந்து பாராளுமன்ற தேர்தல் முடிந்து உக்கார வைக்கணும் என விமர்சனம் செய்தார்.