கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராசிசெட்டிபாளையத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு சுமதி கோபித்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஐயப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.