தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.