மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியான ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அந்த பதிலில் மத்திய அரசில் பணியாற்றும் பெண்களுக்கு மாத விலக்கு கால விடுப்பு ஏதும் இல்லை என மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் அரசுப்பணிகள் விடுமுறை விதிகள் 1972ல் மாத விலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. விடுமுறையை சேர்க்க எந்த முன்மொழிவும் இல்லை என்று அவர் கூறினார்.