
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய மாநாட்டில்… நம்முடைய இயக்க வரலாறுகள் சொல்லப்படும்….. நம்முடைய இயக்கத்தினுடைய கொள்கைகள் பேசப்படும்….இரண்டரை ஆண்டுகால ஆட்சியினுடைய சாதனைகள் சொல்லப்படும்… எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்து, அதெல்லாம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தலைவர் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்
தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் செய்திருக்கிறோம், சொல்லாததையும் சேர்த்து செய்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நாளே நாலு திட்டத்தை உங்களிடம் விளக்க விரும்புகிறேன். எடுத்துக் கூற விரும்புகிறேன்… உங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளில்… உங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், பல்வேறு இயக்கத்தினுடைய பேசும் பொழுது இந்த திட்டத்தை பற்றி விவாதிகள்…
முதல் திட்டம் தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன திட்டம்…. ஆட்சி பொறுப்பு ஏற்று தலைவரிட்ட ஐந்து கையெழுத்தில் இது முக்கியமான கையெழுத்து. அது என்ன என்றால், மகளிருக்கு கட்டணம் இல்லாத பேருந்து வசதி. ஒவ்வொரு மகளிரும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தின் மூலமாக சேமிக்கிறார்கள். வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் மகளிர் சேமிக்கிறார்கள். அடுத்த திட்டம் புதுமைப்பெண் திட்டம்.
இது நம் தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டம். அரசு பள்ளியில் படிச்சு….. பெண்கள் படிக்க வேண்டும்…. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்….. பெண்கள் ஆண்களுக்கு நிகராக சரிசமமாக உட்கார வேண்டும்…. படிக்க வேண்டும் என்ற உன்னதமான திட்டம்… அரசு பள்ளியில் படித்து மேற் கல்வி படிக்க, எந்த கல்லூரியில் போய் சேர்ந்தாலும்….
தனியார் கல்லூரியில் போய் சேர்ந்தாலும்…. அந்த மாணவியனுடைய வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது. இதுவும் தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டம். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும்…. கல்வி கற்க வேண்டும் என்று உன்னத நோக்கத்தோடு முதலமைச்சர் உடைய காலை உணவு திட்டம்.
முன்னாடி எல்லாம் பெற்றோர்கள் காலையில் எழுந்து வேலைக்கு போகின்ற பெற்றோர்கள்…. சமைப்பதற்கு நேரம் இல்லாமல், பசங்களை பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள்… அய்யோ புல்லை பசியோடு போயிருக்கே என வருத்தத்தோடு இருப்பாங்க. பள்ளிக்கூடத்துக்கு போனானே பாடம் கவனிச்சு இருப்பானாஎன பெற்றோர்கள் வருத்தத்தில் இருப்பார்கள்.
இன்று பெற்றோர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய குழந்தைகளை பார்த்து கொள்ள நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார் திராவிட மாடல் அரசு இருக்கிறது என்று, சந்தோஷத்தோடு வாழ்த்தி…. மன நிறைவோடு பள்ளிக்கு அனுப்புகிறார்கள். முதலமைச்சர் உடைய காலை உணவு திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 17 லட்சம் மாணவர்கள்…. 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அரசு அதிகாரிகள் எல்லாம் வந்து, எப்படி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள் ? எங்களுடைய மாநிலத்திலும் செயல்படுத்த போகிறோம் என்று அந்த திட்டத்தை பார்த்துட்டு போயிருக்கிறார்கள். இது தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம்…. செய்யவே முடியாது என்று அதிமுக சொன்ன திட்டம்…. அது என்னவென்றால்,
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். மகளிருக்கு 1000 ரூபாய் மாதம் தோறும்… இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் மகளிர் இந்த திட்டத்தினால் பயன்பெற்று இருக்கிறார்கள். ஒரு திட்டத்தை அறிவித்தால், பொதுவாக காலம் தாமதம் ஏற்படும் . நிதி நெருக்கடி காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு… இந்த திட்டத்தையும் பல்வேறு மாநிலங்கள் நாங்களும் செயல்படுத்த போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி 17 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் பயன்படுகிறார்கள். ஒரு திட்டத்தை அறிவித்தால் போய் சேர்வதற்கு ஒரு நாள் இரண்டு நாள் தாமதமாகும்… நம்முடைய தலைவர் என்ன பண்ணார் என்றால், செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் உடைய பிறந்தநாள்… அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வரும் என்று சொன்னார்…
ஆனால் தலைவர் என்ன பண்ணார் என்றால், 14ஆம் தேதி அனுப்பி விட்டார். இந்த மாதம் 3ஆவது மாதம் கொடுத்து இருக்கிறோம்… 15 ஆம் தேதி தான் கொடுக்க வேண்டும்…. ஆனால் தீபாவளி பண்டிகை வருகிறது…. மக்கள் சந்தோஷமாக இருக்கட்டும்…. மகிழ்ச்சியாக இருக்கட்டும் என பத்தாம் தேதியே ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு இந்த திட்டம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த திட்டத்ம்… இந்த நாளே திட்டம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். யாராவது ஏதாவது குறை சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்தை பற்றி பேசுங்கள், கேளுங்கள் என தெரிவித்தார்.