கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான தொண்டர்கள் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் தலைவர் விஜய் பேச தொடங்கியதும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முடிவு எடுத்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனுதாக்கல் செய்து உள்ளார். பாதுகாப்பு உறுதியான உடனே விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.