திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் 38 லட்ச ரூபாயும், கலசபாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்மில் 3 லட்ச ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டது. அதன்படி மொத்தமாக 72.5 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தின் பதிவெண் கொண்ட வாகனத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. மேலும் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.