ஈரோடு கிழக்கில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. பண பட்டுவாடா போன்ற குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் ஏற்கனவே இருந்த எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அனுதாப ஓட்டு மற்றும் திமுக அமைச்சர்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் கட்சிக்கு செம டஃப் கொடுத்து வருகிறார் என்றே சொல்கிறார்கள். ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக மாறுவதோடு டெல்லியின் ஆதரவையும் முழுமையாக பெற்று விடலாம் என்று கணித்துள்ளாராம்.

இதன் காரணமாக ஸ்வீட் பாக்ஸ் விநியோகத்தை எந்த குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டு உள்ளாராம். இந்த பொறுப்பை முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் எடப்பாடி ஒப்படைக்க அவரோ முடியாது என்று மறுத்து விட்டதால், தங்கமணி மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோரை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை நடத்தி சில முக்கிய வியூகங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய வியூகம் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற உதவும் என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள். மேலும் ஈரோடு கிழக்கில் தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து விட்டால் கண்டிப்பாக அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக மாறிவிடலாம் என்பதை எடப்பாடி இலக்கு என்பதால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.